வெள்ளி, 3 ஜூலை, 2009

குரல் கொடு பிரபாகரா.

குரல் கொடு பிரபாகரா
நெஞ்சம் வலிக்கின்றது
நினைவும் வலிக்கின்றது
எங்கே இருக்கின்றாய் பிரபாகரா
வந்த செய்தியை
நம்பவில்லை நாங்கள்
குரல் கொடு பிரபாகரா

கொழுந்து விட்டெரிகின்றது ஈழம்
கொட்டுகின்றார் நெய்யென தமிழர் இரத்தத்தை
நெஞ்சம் வலிக்கின்றது
நினைவும் வலிக்கின்றது
குரல் கொடு பிரபாகரா
கோர்ட்டில் வழக்கை முடித்திட - உன்
இறப்பு சான்றிதழ் கேட்கின்றார்கள்
அமைதிப் படை சிதைத்த பெண்களின்
உடல்களை மறைத்திட
ஆனந்த கூத்தாடி
வரவேற்ற தமிழரை
அழித்தப் படையின்
களங்கத்தை மறைத்திட - உன்
இறப்பு சான்றிதழ் கேட்கின்றார்கள் - நான்
சுhகவில்லை என்றொரு
குரல் கொடு பிரபாகரா - நீ
ஈழத்தின் தவப் புதல்வன் - உனக்கு
இறப் பென்பதில்லை - நீ
வீரத்தின் விளை நிலம்
விடுதலையின் உயிர் மூச்சு
வந்த செய்தியை
நம்பவில்லை நாங்கள்
குரல் கொடு பிரபாகரா
ஓற்ற நாடாக
உன்னை எதிர்க்க முடியாமல்
ஒன்பது நாடுகள் ஒன்று கூடி
விடுதலையைக் கொன்று விட்டு
விடுதலைப் புலிகளைக்
கொன்றதாய் கூறுகின்றார்கள்.
வந்த செய்தியை
நம்பவில்லை நாங்கள்
குரல் கொடு பிரபாகரா
நீ நெருப்பின் கொழுந்தாய்
நின்று எரிபவன்
சுனாமி அலைகளில்
நீந்தி எழுந்தவன் - உன்னை
கொன்று விட்டதாய் கொக்கரிக்கின்றார்கள்
நெஞ்சம் வலிக்கின்றது
நினைவும் வலிக்கின்றது
குரல் கொடு பிரபாகரா

வெள்ளைக் கொடியேந்தி
புத்தன் சிலை பார்த்த
20000 தமிழர்களை
பிரங்கிகளால் சுட்டுப் பொசுக்கி
ஈர மண்ணை உழுவது போல்
புல்டோசரால் சிதைத்தழித்தார்கள்
வழிந்தோடிய இரத்தம்
தமிழீழ மண்ணை இறுகத் தழுவியது.

இந்தக் காட்சிகளைக் கண்டும்
நெஞ்சம் கரையாமல் - உலகம்
நின்று பார்க்கின்றது
நெஞ்சம் வலிக்கின்றது
நினைவும் வலிக்கின்றது
குரல் கொடு பிரபாகரா.

14- ஆம் வயதிலேயே
தீக்குச்சி மருந்தால்
விடுதலை நெருப்பைப்
பற்ற வைத்தாய்
உலகத் தமிழரின்
மனங்களிலெல்லாம்
மெழுகு வர்த்தியாய் நின்று எரிகின்றாய்.
வந்த செய்தியை நம்ப வில்லை நாங்கள்
நெஞ்சம் வலிக்கின்றது
நினைவும் வலிக்கின்றது
குரல் கொடு பிரபாகரா
30 இலட்சம் மக்களின் மனங்களில்
நீ வளர்த்த
விடுதலை வேள்வியைக் கண்டு
21ஃ2 கோடி மக்களைக் கொண்ட
இலங்கை பதறியது.
நூறு கோடி மக்களைக் கொண்ட
இந்தியா கலங்கியது
நூற்று பத்து கோடி மக்களைக் கொண்ட
சீனாவும்
10 கோடி மக்கள் கொண்ட பிரிட்டனும்
25 கோடி ஐரோப்பிய கூட்டமைப்பும்
20 கோடி பாகிஸ்தானும்
ஓன்று கூடியும் - அஞ்சுகின்றன.
ஈழ விடுதலைக்குத் தான்
எத்தனை ஆற்றல்
அத்தனையும் - உன்னுயிர்
அடைகாத்த ஆற்றல் அல்லவா
உன்னைக் கொன்று விட்டதாகக்
கூறுகின்றார்கள்.
வந்த செய்தியை நம்பவில்லை நாங்கள்
குரல் கொடு பிரபாகரா.
சங்க காலத்தின்
காதலைப் பேசியே
இன்றைய தமிழனின்
எழுச்சியை மறைத்திடும்
முது கெழும்பிலாதோர் மத்தியில்
கைதெனும் வார்த்தை கேட்டு
கதறிடும் கோழைகள் மததியில்
இனத்தின் மானம் காக்க
எழுந்த மாவீரன் நீ
மேடையில் பேசியே
இனத்தைக் கெடுத்தவர்கள் மத்தியில்
விடுதலைப் படை அமைத்தாய்
படைக் கருவிளகள் படைத்தாய்
விமானப் படையைக் கட்டியமைத்தாய்
கப்பல் படையை கட்டி எழுப்பினாய்
நீர்மூழ்கிக் கப்பல்களை வடிவமைத்தாய்
எத்தனை எத்தனை படைவரிசைகள்
விடுதலை இயக்கங்கள் கண்டறியாத முப்படைகள்
இனத்தைக் காத்திட எத்தனை எத்தனை
குளம் கண்டாய் - உனை
கோன்று விட்டதாய் கூவுகின்றார்கள்
நெஞ்சம் வலிக்கின்றது.
நினைவும் வலிக்கின்றது
குரல் கொடு பிரபாகரா
திம்புவில் உன்னை வளைக்கப் பார்த்தார்கள்
அசோகா ஓட்டலில் அடைக்கப் பார்த்தார்கள்
வீடுதலை முத்திரை பொறித்து
உதவிக்கு வந்த படைக்கருவிகளைக்
கப்பல் கப்பலாய்
கடலில் மூழ்கடித்தார்கள்
படைநடத்தும் தளபதிகளை
படையேந்தும் வீரர்களை
வஞ்சனையாகக் கொன்று குவித்தார்கள்
உயிரைக் கொடுக்கின்றேன்.
விடுதலை கொடுங்கள் என்றான் திலீபன்
அஹிம்சையின் வடிவெடுத்து
உண்ணா விரம் இருந்தான்.
நாட்கள் உருண்டன நா வறண்டது
தண்ணீரும் குடிக்கவில்லை திலீபன்
இரவும் பகலும்
இந்தியாவின் சொல்லுக்காக - தவம் கிடந்தான்.
நாடி ஒடுங்குவதை உணர்ந்தாலும்
எச்சிலையும் விழுங்காமல்
‘விடுதலை” உணர்வுகளை மட்டுமே
விழுங்கிக் கொண்டிருந்தான்
திலீபன் எனும் விடுதலைக் குயில்
துடித்து துடித்து சாகும் வரையிலும்
காந்தி நாடு கண்மூடிக் கிடந்தது.
கண் திறந்ததும்; இலங்கையின் ஒற்றுமைக்கு
‘திலீபனின் சாவு” ஆபத்தென்று அறிவித்தது.
பேசும் மொழியுரிமை கேட்டோம்.
படிக்கும் கல்வியுரிமை கேட்டோம்.
படித்ததற்கு வேலை கேட்டோம்.
எதுவும் கொடுக்கவில்லை இலங்கை அரசு.
மாவட்ட கவுன்சில் கேட்டோம்
மாநில நிர்வாகம் கேட்டோம்.
ஒன்றுபட்ட இலங்கையில் வாழ
ஓராயிரம் உண்ணாவிரதங்கள் - இருந்தோம்
கேட்க மறுத்தது இலங்கை அரசு
விடுதலை கேட்ட வீரர்களின் கண்களை
வெட்டியெடுத்தது சிங்கள அரசு
எத்தனைக் கொடுமைகள் - ஈழத்தின் மண்ணில்
இந்தியா எனும் துணைக்கண்டம்
இமை கொட்டாமல் பார்த்து நின்றும்.
இனத்தின் மானம் காக்க
எழுச்சியுற்ற புலிப்படையை
அழித்திட ஆயுதங்கள் அனுப்பியது.
வஞ்சம் தீர்த்துக் கொள்ள
இலட்சம் தமிழர்களின் இரத்தப் பலியுடன்
தமிழீழ விடுதலையையும்
பிரபாகரன் உயிரையும்
பலியாகக் கேட்கின்றது
எங்கே இருக்கின்றாய் பிரபாகரா
நெஞ்சம் வலிக்கின்றது
நினைவும் வலிக்கின்றது
குரல் கொடு பிரபாகரா
ஒரே ஒரு முறை உன் குரல் கேட்டால் போதும்
‘புதிய தோர் வரலாறு படைத்திட”:
வந்த செய்தியை நம்பவில்லை நாங்கள்
குரல் கொடு பிரபாகரா.
சூர்யா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக