செவ்வாய், 21 ஜூலை, 2009

இப்போதாவது குரல் கொடுப்போம்! ஈழத்தமிழர்களுக்கு கைகொடுப்போம்.

சத்தம் இல்லாமல் நடக்கும் தமிழின அழிப்பு:
*3 லட்சம் தமிழர்கள் வதை முகாம்களில் இராணுவ கட்டுபாட்டில் நடைபிணங்களாக.
*இராணுவத்தால் பிடித்துசெல்லபட்ட உறவுகள் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் பிரிந்து கிடக்கும் குடும்பங்களாக.
*பட்டினியாலும், நோயாலும் வாரத்திற்கு 1400 பேர் என்று செத்து கொண்டிருக்கும் நிலையில்.
*ஐ.நா அமைப்புகளை உள்ளே விடாமல், செஞ்சிலுவை சங்கத்தை விரட்டி அடிக்கும் சிங்கள அரசு.
*மூன்றே வருடத்தில் 3 லட்சம் மக்களையும் சோறு, தண்ணீர், மருந்து தராமல் கொல்ல திட்டமிட்டுள்ளது சிங்கள அரசு.
*ஈழத் தமிழர்களுக்கு மிச்சம் இருக்கும் ஒரே நம்பிக்கை நாம் மட்டும் தான்.

மரங்களும், விலங்குகளும் அழிவதை தடுக்கும் உலக நாடுகள் ஈழத் தமிழர்கள் கொல்லபடுவதை அனுமதித்தன, இன்றும் அமைதி காக்கின்றன. ஏன்?
ஈழத்தமிழர்களுக்கு நாதி இல்லை, தமிழகத் தமிழர்கள் இரக்கமற்றவர்கள் என்றா?
# பக்கத்துவீட்டில் சோறு இல்லாவிட்டாலே, பொங்கியதில் பாதி தந்து பசி ஆறும் நாம், ஈழத்தமிழர்களை அனாதையாக விடப் போகிறோமா?
# "இராசபக்சே கூட்டத்தை கூண்டிலேற்று" என்று நம்மை விட்டால் யார் கேட்க போகிறார்கள்?
ஐ.நா வை ஈழத்தில் தலையிடச் சொல்வோம்..
கொல்லப்பட்ட தமிழர்களும் மனிதர்களே..அதற்காக நியாயம் வழங்கச் சொல்வோம்..
ஈழத் தமிழர்கள் விரும்புவது "சிங்களனோடு சேர்ந்து வாழ்வதையா? இல்லை பிரிந்து போவதையா?" என்பதை அவர்களிடமே கேட்கச் சொல்வோம்..

உலகின் மனசாட்சியைத் தட்டி எழுப்புவோம். மிச்சமிருக்கும் தமிழர்களையாவது காப்பாற்றுவோம்..