வியாழன், 7 ஜனவரி, 2010

மாவீரன் முத்துக்குமார் நினைவு நாளில்..........



தமிழ்த்தேசிய மக்களின் விடுதலைக்கான‌




அரசியல் ஒற்றுமை மாநாடு!


31 சனவரி 2010 ஞாயிறு
3காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை
முத்துக்குமார் நினைவரங்கம்
இரங்கா பவனம், அம்மா மண்டபம் சாலை, திருவரங்கம், திருச்சி.



முத்துக்குமார் நினைவேந்தல் குழு ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍~ தமிழ்நாடு  

 இவ்வளவு புத்திசாலியான நீ ஏன் சாகத் துணிந்தாய்? என மருத்துவர்கள் கேட்டபோது ~ "என்னைவிட புத்திசாலியான குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் ஈழத்தில் கொல்லப்படுகிறார்கள். போர் முனையில் சிக்கித் தவிக்கிறார்கள் அவர்களை காப்பற்ற வேண்டும் என வலியுறுத்தத்தான்" ~ என தயங்காமல் சொன்னான் முத்துக்குமரன்.
அநியாயமாய் முத்துக்குமரனை சாகத்தூண்டியது எது? ஈழ அழிப்புப் போரை முன்னின்று நடத்துவது இந்தியா என்பதைப் புரிந்து கொண்டான். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாக செய்யவேண்டியது தானே! ஏன் திருட்டுத்தனமாகச் செய்யவேண்டும்? என மனமுடைந்து கேட்டான்.
சட்டக் கல்லூரி மாணவர்களும், வழக்குறைஞர்களும், இன்னும் சில பிரிவினருமாக தனித்தனியே நடத்தி ஈழ ஆதரவுப் போராட்டங்களை ஒருங்கினைத்து பலம்பெறச் செய்ய சரியான அரசியல் தலைமை இல்லையே என வெறுத்துப் போனான். உங்களுக்கு அமைந்தது போன்ற ஓர் உன்னதத் தலைவன் எங்களுக்கு இல்லையே! என தமிழீழ மக்களிடம் மன்னிப்புக் கேட்டான்.
முத்துக்குமரன் உயிராயுதம் ஏந்தினான், மரணத்தை தழுவினான். அவனைத் தொடர்ந்து மறவர்கள் 17 பேர் உயிர் கொடை செய்தனர். இவர்களின் மரணத்துக்கு முன்னும் தமிழ்நாட்டில் பல போராட்டங்கள் நடந்தன. மரணத்துக்கு பிறகும் பல போராட்டங்கள் நடந்தன. ஆனாலும் இவர்களின் ஆசைபடி ஈழமும் காப்பாற்றபடவில்லை, இன்று வரை இராமேசுவரம் மீனவர்களும் காப்பாற்றப்படவில்லை.
நமது போராட்டங்கள் இந்திய அரசையோ; அதன் எடுபிடி தமிழக அரசையோ; ஒரு பஞ்சாயத்துப் போர்டு கவுன்சிலரையோ கூட ஆட்டி அசைக்கவில்லை.
அந்த அளவுக்கு தி.மு.க., ஆ.தி.மு.க., உள்ளிட்ட தமிழக கட்சிகளும், காங்கிரசு, பி.ஜே.பி உள்ளிட்ட அகில இந்தியக் கட்சிகளும் தங்களது தொண்டர்களை அரசியல் காயடித்துவிட்டன. பனம், பதவி, சுகபோகங்களுக்காக தமிழக மக்களின் உரிமைகளைக் காவு கொடுத்துவிட்டன. தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சியின் மூலம் தோன்றிய இயக்கங்களும் கூட திரவிட இயக்கங்களின் துரோகத்துக்கும், சீரழிவுக்கும் வாலாகிவிட்டன. நமது போராட்டங்கள் திட்டமிட்டே பலவீனப்படுத்தப்படுத்தப்படுகின்றன.
ஈழத்தின் துயரத்தில் நாம் மூழ்கிக் கிடக்கும் போதே நமது நதிநீர் உரிமைகளைத் தட்டிபறிக்கிறது ஆந்திரமும், கேரளமும், கடல்சார் உரிமைகளைப் பறித்து மீனவர்களைக் கழுவேற்றத் துடிக்கிறது இந்திய அரசு. விலைவாசி உயர்வை மேலும் மேலும் ஏற்றி மக்களைப் பட்டினியில் கொல்கிறது இந்திய அரசும் அதன் எடுபிடி தமிழக அரசும்.
எல்லாவற்றுக்கும் என்னச் செய்ய போகிறோம்?
நம்மையே நம்மால் காப்பாற்ற முடியாவிட்டால், நாம் எப்படி தமிழர்களை காப்பாற்ற முடியும்?
நந்திகிராமிலும், லால்கரிலும் மக்களின் முன்பு அரசுகள் மண்டியிட்டது எப்படி?
தனித் தெலுங்கானப் போராட்டத்தில் அரசுகளை நிலைகுலைய செய்தது எது?



ஒற்றுமை! ஒற்றுமை!! ஒற்றுமை!!!
ஒன்று படுவோம்! வென்று காட்டுவோம்!

* இந்திய வல்லாதிக்கத்தை முறியடிப்போம்!  
* தில்லியின் எடுபிடி தமிழக அரசை வீழ்த்துவோம்!
* தமிழ் மக்கள் குடிநாயக அரசை மலரச் செய்வோம்! 
* ஈழ விடுதலைக்கு எப்போதும் துனை நிற்போம்!