வெள்ளி, 3 ஜூலை, 2009

மைசூர் புலியும் விடுதலை புலியும்

தொப்புள் கொடி உறவுகள் அங்கு கொத்து கொத்தாய் இறக்க கண்டும் காணாமல் கவர்ச்சி நடிகைகளின் அட்டை படங்களுடன் கிசு கிசு எழுதிக்கொண்டிருக்கம் தமிழ் ஊடகங்களுக்க செருப்படி தரும் வகையில் அன்னிய மொழியான கன்னட வாரபத்திரிக்கையான கௌரி லங்கேஷில் ஜீன் 3/2009 இல் கன்னட பத்திரிக்கையாளர் குமார் புருடிகட்டே எழுதிய கட்டுரை. தமிழ் பத்திரிக்கைகள் எல்லாம் திரிவு நிலை செய்திகளை வெளியிட்டு கொண்டிருக்கையில் ஈழத்தை தனி நாடாக பவித்து எழுதபட்ட அருமையான கட்டுரை மைசூர் புலியும் விடுதலைபுலியும் இதே உங்களுக்காக இதை படித்தாவது தமிழ் ஊடகங்கள் திருந்துமா.

மைசூர் புலியும் விடுதலைப்புலியும்
கன்னட வாரப்பத்திரிக்கையான கௌரி லங்கேஷில் ஜீன் 3/2009

சரியாக இருநூற்று பத்தாண்டுகளின் வரலாற்றில் இரண்டு புலிகளை கொன்ற மாபெரும் வரலாற்று நிகழ்வுகள் நடந்துள்ளன. ஓன்று வரலாற்றில் மைசூர் புலி திப்பு சுல்தானைக் கொன்ற நிகழ்வு இரண்டாவது தமிழீழ விடுதலைப் புலியான பிரபாக்ரனைக் கொன்ற நிகழ்வு இரண்டு புலிகளின் வாழ்க்கையிலும், வரலாற்றிலும் வியப்பிற்குரிய பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. மைசூர் புலியான திப்பு சுல்தானை 1799 ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் தேதியன்று வெள்ளையர்கள் கொன்றனர். சுரியாக 210 ஆண்டுகளுக்குப் பின் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாளான்று தமிழ்ப் புலியான பிரபாகரனைக் கொன்றதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இருவரும் தங்கள் தாங்கள் நாட்டை அளவற்ற பற்று கொன்டிருந்தனர், நமது தாய்நாடான இந்தியாவை, ஆக்கிரமித்து, இந்தியாவின் இயற்கை வளங்களையெல்லாம் கொள்ளையடித்ததுடன் நில்லாமல் இந்திய மக்களை அடக்கி ஒடுக்கி ஆள முயற்சித்த சமயத்தில், ஆங்கிலேயர்களை எதிர்த்து விரமிக்க போர்களை நடத்தியவன் திப்புசுல்தான் நமது நாட்டின் சுதந்திரம் மற்றம் உரிமைகளை பறித்துக் கொண்டதுன், நம்மீது சர்வாதிகார ஆட்சியை நடத்தி, இந்தியாவை அடிமை நாடாக்கி சமயத்தில், ஆங்கிலோயர்களை இந்திய துணைகணடத்திலிருந்தே விரட்டியடித்திட போராடியவன் திப்புசுல்தான் தனது தாயகத்தை ஆங்கிலேயர் அடிமை நாடாக்குவதை சகித்துக் கொள்ளாத திப்பு தன்னந்தனியாக நின்ற போதும், இறுதி மூச்சு வரை, உள்ளம் தளராமல் போராடிய தேசப்பற்றானன் திப்புசுல்தான் அதே போன்ற இனவெறிபிடித்த இலங்கை சிங்கள அரசு, இலங்கையின் பூர்வ குடிகளாக இலங்கையின் வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களின் மீது சொல்லிமுடியாத அளவில் கொலைவெறி தாக்குதல்கள் நடத்திய சமயத்தில், தமிழீழத்தின் இயற்கை வளங்களையெல்லாம் கொள்ளையடித்த நேரத்தில், தமிழீழ மக்களை அடிமைகளென அணிதிரட்டி போராடியவன் பிரபாகரன், இந்த ஜீவமரணப் போராட்டத்தின் மூலம், இலங்கைத் தீவில் தமிழர்கள் சுயமரியாதையுனும் சுதந்திரத்துடனும் வாழ்வதற்காக சுதந்திர தமிழீழத்தைக் கட்டியமைத்தவன் பிரபாகரன் தான் கட்டியமைத்த சுதந்திர தமிழீழத்தின் மீது இலங்கைப் இராணுவத் தாக்குதலை நடத்திய சமயத்தில் தான் கட்டியமைத்த சுதந்திர தமிழீழம் மீண்டும் சிங்களவர்களின் அடிமைநாடாக அனுமதிக்க முடியாதென்று இறுதி மூச்சுவரை போர்க்களத்தில் நின்று போராடிய மாசுமருவற்ற தேசபக்த்தர் பிரபாகரன்.

திப்பு மற்றும் பிரபாகரன் இருவரும் தங்கள் சொந்தக் குடும்பத்தின் எதிர்காலத்தை விட தாய் நாட்டின் எதிர்காலத்தையே மிகவும் நேசித்தார்கள். இவர்கள் தாய்நாட்டின் மீது கொண்டிருந்த பாசத்திற்கு சமமான உதாரணங்கள் உலக வரலாற்றில் இல்லை. கி.பி. 1789, 1792 இடையில் நடந்த மூன்றாவது மைசூர் யுத்தத்தில் ஆங்கிலேயர்கள் திப்புவை தோற்கடித்தனர் தோற்கடித்ததுடன் ரூ.330 லட்சம் ரூபாயை போரில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு, நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டுமென்று ஆங்கிலேயர்கள் திப்பு சுல்தானுக்குக் கட்டளையிட்டனர் ஆனால் அந்தச் சமயத்தில் திப்புவிடம் அந்தளவு பணம் கையிருப்பில் இல்லை. எனவே பணத்தை கொடுக்கும் வரை ஆங்கிலேயர்களிடம் தனது இரண்டு மகன்களையும் பணயமாக வைத்தான் தன் தாய்நாட்டிற்காக, பாசத்துடனும், மமதையுடனும் வளர்த்த மக்களையே பணயமாக வைத்து உதாரணங்கள் அரசர்களின் வரலாறுகளில் கிடைப்பதில்லை. இத்தகைய திப்புவின் வாழ்க்கையைப் போன்றதே பிரபாகரனின் வாழ்க்கையும். தூன் நேசித்த தமிழீழத்திற்காக என்று ஆயுதமேந்தி போராட்டத்தை ஆரம்பித்தாரோ அன்றுளு முதல் அறுதி வரை போர்க்களமே பிரபாகரின் இல்லறமானது. போர்க்களத்தின் கஷ்ட நஷ்டங்களே வாழ்வானது தனது குழந்தைகளுக்காவது இத்தகைய கஷ்ட நஷ்டங்கள் வரக்கூடாதென்று ஒவ்வொரு தந்தையும் நினைப்பது இயல்பான நமைமுறையாகும். ஆனால் பிரபாகரன் அப்படி எண்ணவில்லை. ஈழ விடுதலைக்கான போரில், சிங்கள ராணுவத்தாக்குதளில் சார்லஸ் லுகாஸித ஆண்ட்டனி என்ற விடுதலைப் புலி கொல்லப்பட்டார். இவர் விடுதலைப் போரில் பிரபாகரணுக்கு வலது கரமாக விளங்கியவா. எனவே பிரபாகரன் தன் மூத்த மகனுக்கு சார்லஸின் பெயரையே சூட்டினார் பெயர் வைத்தது மட்டுமல்லாமல் தமிழீழ போராட்டத்தின் போர்க்களத்திற்கும் தன்னுடனேயே அழைத்துச் சென்றார். அது மட்டுமல்லாமல் தனது மகனை விமான கட்டமைப்பு தொழில்நுட்ப துறையில் இன்ஜினியரிங் படிக்க வைத்து தமிழ்ப்புலிகளுக்காகவே விமானப் படையையே உருவாக்கினார் அந்த விமானப் படையின் பொறுப்பையும் சார்லலே கவனித்துக் கொண்டான். சுதந்திர தமிழ் ஈழத்திற்கான போர்க் களத்திலேயே வீரமரணம் அடைந்தான் சார்லஸ் சார்லஸீன் மரணமடைந்த மறுநாளே தந்தை வேலுப்பிள்ளை பிரபாகரணும் போர்க்களத்திலேயே வீரமரணத்தைத் தழுவியதாக அறிவிக்கப்பட்டது.

மூன்றூவதாக, திப்புவும் பிரபாகரனும் தாங்கள் நம்பிய நம்பிக்கை, கொள்கையிலிருந்து இம்மியும் விலகாத நெஞ்சுரம் மிக்கவர்களாக இருந்தனர். கடைசியாக 1799 - இல் நடந்த நான்காவது மைசூர் போரின் சந்தர்ப்பத்தில் மைசூர் உடையார் (மைசூர் அரசர்) மராட்டியர்கள், ஹைதராபாத் நிஜாம் என எல்லா இந்திய அரசர்களும் தங்கள் தாங்நாட்டைப் பிரிட்டீஷாரின் பாதங்களில் அர்ப்பணித்து ஆங்கிலேயரின் அடிமைகளாகி ஆங்கிலேயருடன் இணைந்து கொண்டனர். மைசூர் புலியான திப்புவை தோற்கடிப்பதற்காக மேற்குறிப்பிட்ட அரசர்கள் தங்கள் தங்கள் படைகளை எல்லாம் ஆங்கிலேயர்படையுடன் இணைத்து மிகப்பெரிய ஆக்கிரமிப்புப் படையாக மாற்றினர் மறுபுறமோ திப்பு தன்னந் தனி அரசனாக நின்றான். திப்புவுடன் இருந்த அவனுடைய படைவீரர்கள் அவனைப் போலவே சுதந்திர வேட்கையுடன் இறுதிவரை பிரிட்டீஷரை எதிர்த்துப் போராடும் நெஞ்சுரம் மிக்கவர்களாக இருந்தனர் திப்புவின் இராணுவம் ஆங்கிலேயர் மற்றும் அவர்களுடன் கூட்டு சேர்ந்து இந்திய அரசர்களின் படையுடன் ஒப்பிடும் பொழுது அளவில் சிறிய படையாக இருந்தது ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்புப் படை திப்புசுல்தானின் கோட்டைகளை ஒவ்வொன்றாகக் கைப்பற்றிக் கொண்டே முன்னேறியது இறுதியாக சிறீரங்கப் பட்டண கோட்டையை முற்றுகையிட்டனர் 50,000க்கும் அதிகமான படைவீரர்களைக் கொண்ட ஆங்கிலேயர் தலைமையிலான கூட்டுப்படை சிறீரங்கல் பட்டணத்தைப் முற்றுகையிட்டதும். இனி போரில் வெல்ல முடியாது என்பதைத் திப்புசுல்தான் புரிந்து கொண்டான் அந்த சந்தர்ப்பத்தில் ஆங்கிலேய படையின் சேனாதிபதியான ஜெனரல் ஹாரீஸ் திப்புவை சரணடையுமாறு கேட்டுக் கொண்டான் ஆங்கிலேயருக்கு சரணாகுகின்றேன் என்று மட்டும் அறிவித்து விடு. ஆனால் உண்மையாக நீ சரணடைய வேண்டாம். உனது பேரரசின் சக்கரவர்த்தியாக நீயே ஆட்சி நடத்து என்றும் கேட்டான். மேலும் இந்தியத் துணைக்கண்டத்தில் மற்ற இந்திய அரசர்கள் எங்களுடன் இருப்பது போன்றே நீயும் எங்களுக்குக் கட்டுப்பட்டு இருக்கின்றாய் என்பதை மட்டுமே உலகத்திற்குத் தெரியப்படுத்த விரும்புகின்றோம் என்றும் கூறினான் ஆங்கிலேயத் தளபதி எவ்வளவோ எடுத்து சொல்லிப் பார்த்தான் திப்புவின் சுயமரியாதையும் சுதந்திர வேட்கையும் நிறைந்த இதயம், எதிரிகளுடன் சமரசம் செய்து கொள்ள ஒப்பவில்லை தான் உயிருடன் இருக்கும் போதே தன் நாட்டை ஆங்கிலேயரின் அடிமை நாடாக்கிட திப்புவின் நெஞ்சம் அணுவளவும் ஒப்புக்கொள்ளவில்லை போர்க்களத்தில் தோற்பது உறுதி என்று தெரிந்த பின்னும் போர்க்களத்தில் மரணமடைவது உறுதி என்று தெரிந்து பிறகும், அளவில மிகவும் சிறியதான ஆனால் விடுதலை வேட்கையை நெஞ்சில் கொண்டிருந்த இராணுவத்தை வழி நடத்தி, ஆங்கிலேயரின் மிகப் பெரிய இராணுவத்தை எதிர்த்துப் போரிட்டான் ஒரு சாதாரண போர்வீரனைப் போல போர்க்களத்தில் போரிட்டுக் கொண்டே வீரமரணத்தைத் தழுவினான் திப்பு சுல்தான் உலகத்தலேயே ஆங்கிலேயரை எதிர்த்து ஒரு சாதாராண போர்வீரன் போல் போர்க்களத்தில் போரிட்டுக் கொண்டே வீரமரணத்தைத் தழுவிய ஒரே மன்னன் திப்புசுல்தான் தான்.

பிரபாகரணும் திப்புசுல்தான் போலவே போராடினான் தமிழீழத்தின் நான்காவது சுதந்திரப் போர், 2009 மார்;ச் - ஏப்ரல் மாதங்களில் மிகக் கடுமையாக நடந்து கொண்டிருந்த சமயத்தில் பிரபாகனும் தனிமைப்பட்டுப் போனான். பத்தாண்டுகளுக்கும் மேலாக பிரபாகரனுக்கும் ஆதரவாக இருந்த நார்வே, இங்கிலாந்து போன்ற உலகின் பல நாடுகள் பிரபாகரனை தனிமையின் தவிக்க விட்டு விட்டன. ஆனால் பிரபாகரனைப் போலவே சுதந்திர தாகம் கொண்ட விடுதலைப் புலிகள் மட்டுமே பிரபாகரனுடன் இருந்தார்கள். மறுபுறமோ, இந்தியா, அமெரிக்க, சீனா, இங்கிலாந்து உட்பட பத்திற்கும் மேற்பட்ட உலக நாடுகளின் துணையுடன் இலங்கை இராணுவம், தமிழகத்தின் மீது குரூரமான முறையில் தாக்குதல் நடத்தியது யாழ்ப்பாணம், யானை இறவு, கிளிநொச்சி, முதலான விடுதலைப் புலிகளின் கோட்டைகளாகத் திகழ்ந்த பகுதிகளை ஒவ்வொன்றாக இலங்கை இராணுவம் கை;ப்பற்றிக் கொண்டே முன்னேறியது இறுதியாக முல்லைத் தீவின் வட பகுதியில் 5. கீ.மீ பரப்பளவேயிருந்த காட்டுப் பகுதியில் பிரபாகரனை முற்றுகையிட்டன இலங்கைப் படைகள் இத்தகைய நெருக்கடியான போர்க்களத்தில் இருந்த பிரபாகரனுக்கு யதார்த்தம் தெளிவாகப் புரிந்திருந்தது. உலகின் மிகப் பெரிய பல நாடுளகளின் துணையுடனும், மிக நவீன போர்க்கருவிகளுடனும் முற்றுகையிட்டிருக்கும் இலங்கை இராணுவத்தை இயலாத நிலை என்பது பிரபாகரனுக்குத் தெளிளவாகத் தெரிந்தது. அதே சமயத்தில் இலங்கை அதிபனான ராஜபக்ஷே ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணாகும் படி கேட்டுக் கொண்டே இருந்தான். ஆனால் பிரபாகரனின் சுய மரியாதை மிக்க உள்ளம் எதிரியுடன் சமரசம் செய்து கொண்டு சரணடைய சம்மதிக்க வில்லை விடுதலை வேட்கை கொண்ட விடுதலைப் புலிகளை வழி நடத்திக் கொண்டு வீரனாகப் போராடி போர்க்களத்திலேயே வீர மரணத்தைத் தழுவியதாக அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

அடுத்தாக, திப்புவும், பிரபாகரனும், தங்களின் வலது கரமாக யாரை எண்ணியிருந்தார்களோ, அவர்களாலேயே காட்டிக் கொடுக்கல் பட்டனர் திப்புவின் படைத்தளபதியான மிர் சாதிக், திப்புவிற்குத் தெரியாமல் ஆங்கிலேயருடன் இரகசியமாக சேர்ந்திருந்தார்;கள். மேலும் திப்புவின் இராணுவ நடவடிக்கைகளின் இரகசியங்களையும், ஸ்ரீரங்கப்பட்டிணத்திலிருந்த கோட்டையின் இரகசியங்களையும் ஆங்கிலேயருக்கு இரகசியமாக தெரிவித்ததுடன் திப்புவை எதிர்த்தே போரிட்டான். போர்க்களத்தில் திப்பு சுல்தான் வீர மரணமடைந்த பொழுது, இறந்த திப்பு சுல்தானை, இதுதான் திப்பு சுல்தான் என்று அடையாளம் காட்டியதும் அதே மிர் சாதிக்தான்.

பிரபாகரனின் இறுதிப் போராட்டமும் திப்புவின் போராட்டம் போலமே அமைந்து விட்டது ஒரு காலத்தின் பிரபாகரனின் மெய்க்காப்பாளனாக இருந்து, பின்னர் தமிழகத்தின் கிழக்கில் பகுதியின் முக்கிய படைத்தளபதியான கர்னல் கருணா (எ) விநாயக மூர்த்தி முரளிதரன், இறுதியில் பிரபாகரனுக்கு எதிராக மாறிவிட்டான் பிரபாகரனுக்கு எதிராக மாறியதுடன் மட்டுமில்லாமல் தமிழீழத் தமிழர்களின் எதிரிகளான சிங்களவர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டான். இறுதிக் கட்டத்தில் திப்பு மற்றும் பிரபாகரன் வாழ்வில் ஒரே ஒரு வேறுபாடு இருந்தது. அது என்னவென்றால், திப்பு சுல்தானுக்கு இறுதி வரையிலும் கூட மீர் சாதிக்கின் துரோகம் தெரியவில்லை ஆனால் பிரபாகரனுக்கு கருணாவின் துரோகம் தெரிந்திருந்து. பிரபாகரன் தமிழீழகத்திற்கான போராட்டத்தின் முல்லைத்தீவுக் போர்க்களத்தில் கொண்டிருக்கின்ற நேரத்தில் கருணாவோ, கொழும்புவில் இலங்கை அரசாங்கத்தில் மந்திரி பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தான் இறுதியின் முல்லைத் தீவு கோட்டையின், சிங்களப்படையுடன் போராடி பிரபாகரன் வீர மரணத்தை தழுவிய பொழுது இதே கருணாதான் இது பிரபாகரன் உடல்தான் என்று சிங்களர்களுக்கு அடையாளம் காட்டினான்.

மராட்டியர் மைசூர் ஆணையார் மற்றும் ஹைதராபாத் திறமை உதவியுடன் ஆங்கிலேயர்கள் திப்புவைக் கொன்றது. நான்காவது மைசூர் போரில்தான் அதேபோல தமிழீழகத்தின் நான்காவது போரில் இங்கிலாந்து அமெரிக்கா உட்பட பல நாடுகளின் உதவிடன் இலங்கை இராணுவம் பிரபாகரனைக் கொன்றதாக அறிவித்ததும் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக